செயலாக்கம்

சிங்கப்பூரின் 50 ஆண்டுக் காலத் தமிழ் இலக்கியங்கள் மின்னாக்கம் செய்யப்பட்டுத் தேசிய நூலக வாரியத்தின் BOOKSG கீழ்க்கொண்டுவரப்பட்டதற்கு மூல காரணம் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அதனைத் தொடர்ந்து, மேலும் பல தமிழ் மின் தொகுப்புகளை உருவாக்க விரும்பிய அருண் மகிழ்நன் சிங்கப்பூர்த் தமிழ் 2015 திட்டத்திற்கான யோசனையை 2015ன் தொடக்கத்தில் முன்வைத்தார். மூத்த தமிழாசிரியர்களாகிய V R P மாணிக்கம், சுப்பிரமணியம் நடேசன் ஆகியோர் இத்திட்டத்தைப் பரிசீலித்துத் தம் ஆதரவை நல்கினர். பின், அரசாங்க அதிகாரி ராமகிருஷ்ணன் கார்த்திகேயன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் செம்பியன் சோமசுந்தரம் ஆகியோரின் தலைமையின்கீழ் தொண்டூழியர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

சக மாணவர்களும் தமிழ்மொழியின்பால் ஆழ்ந்த ஈடுபாடும்கொண்ட கருத்தொருமித்த நண்பர்களும் தொண்டூழியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாராயணன் ஆண்டியப்பன், பரந்தாமன் சின்னையா, ரஞ்சன் குமார் மற்றும் அவர்தம் கன்வர்ட்டியம் நிறுவனத்தின் சக ஊழியர்கள் கொண்ட இணையத்தள மேம்பாட்டுக் குழு, தமிழை அறிய விரும்பும் அனைத்து வயதினரும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இணையத்தளத்தை உருவாக்குவதில் ஈடுபட்டது. அனைத்துப் பங்களிப்புகளையும் மதிப்பீடு செய்யவும் நல்லதொரு தரத்தை உறுதிப்படுத்தவும், அனுபவமிக்க இரு தமிழாசிரியர்கள் - ச. மதிவாணன், கு. சரவணன் - ஆகியோர் குழுவில் இணைக்கப்பட்டனர்.

இத்திட்டத்தின் முதல் கட்டம், தொண்டூழியர்கள் படங்களைப் பதிவேற்றம் செய்ய வசதியாக ஓர் இணையத்தளத்தை உருவாக்குவதாகும். பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் அதே வேளையில் ஊடுருவல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இத்தளம் இருக்கவேண்டும்.

இரண்டாம் கட்டம், 2015ல் சிங்கப்பூர்ப் பொது இடங்களில் தமிழ்ப் பயன்பாட்டை எடுத்துக்காட்டும் படங்களைச் சேகரிப்பதாகும். இத்திட்டத்தின் காலவரையறையை முற்றாகப் பின்பற்றுவதன் அடிப்படையில், 2015ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட படங்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டன. அதே சமயம், தமிழ் எவ்வாறு பல்வேறு தளங்களில் பயன்படுத்தப்பட்டது என்பதைக் காண்பிக்கும் தேவையும் இருந்தது. அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தமிழ்த் தொடர்புச் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள், விளம்பரங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் மாணவர்கள், பெருமுயற்சி செய்து பல இடங்களிலிருந்தும் இணையத்திலிருந்தும் படங்களைச் சேகரித்தனர்.

இத்திட்டத்தின் இறுதிக் கட்டமாகத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒவ்வொன்றும் சரிபார்க்கப்பட்டு, ஏற்ற துணைத் தகவல்களை இணைத்துச் செம்மைப்படுத்தப்பட்டன.

சிங்கப்பூரில் தமிழ்ப் பயன்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படுவது மாணவர்கள், ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் போன்றோருக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். இத்தொகுப்பு, இந்நாட்டில் தமிழ்மொழியின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை அளவிட்டறியவும் பயன்படும். அதனால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, அல்லது வளங்கள் அமைந்தால், இன்னும் குறுகிய இடைவெளிகளில் இத்தொகுப்பை மேம்படுத்துவதே எதிர்காலத் திட்டம்.

 

Process

The idea for Singapore Tamil 2015 was mooted by Arun Mahizhnan in 2015. He wanted to grow the idea of Tamil digital collections, first seeded in the Tamil Digital Heritage project that led to the digitisation of 50 years of Singapore Tamil literary works at the National Library Board (see BOOKSG). The new proposal was reviewed and endorsed by two senior Tamil teachers, V R P Manickam and Subramaniam Nadaison. Then a team of volunteers was formed under the leadership of Ramakrishnan Karthigayan, a civil servant and Sembian Somasundaram, then President of the Tamil Literary Society at the Nanyang Technological University.

Volunteers were drawn from friends and schoolmates -- kindred spirits that share a deep interest in and affection for the Tamil Language. A web development team comprising Narayanan Andiappan, Paranthaman Chinniah and Ranjan Kumar and his colleagues from Convertium ensured that the website is appealing and accessible to Tamil enthusiasts of all ages. Two highly experienced Tamil teachers, S. Mathivanan and K. Saravanan, were brought in to review all contributions so as to maintain a good standard.

The first stage of the project was to create an integrated e-platform for volunteers to upload images. The website had to be easily accessible and yet protected from intrusions.

The second stage was to collate images depicting usage of Tamil in public spaces in 2015 in Singapore. Only images in use in 2015 are included in this collection to remain faithful to the periodicity of this project. As it is intended to update the collection every five years, this time stamp was considered inviolate. There was also a need to bring in an extensive variety of contexts in which Tamil was used in 2015. These included messages and signage by government agencies, private sector companies, community organisations, Tamil media, and social media platforms. Students from the NTU Tamil Literary Society spent much time and effort visiting various places and scoured the internet for resources.

The final stage included the screening of every entry for quality and error, as well as the annotation of each entry with relevant information.

Tracking of Tamil usage in Singapore will be of much value to students, teachers, translators, researchers, historians, etc. This collection could also be a barometer of the growth or decline of Tamil in this country. Thus the future plan is to update this collection every five years at least or, if resources permit, more frequently.